மாட்டு கறி குறித்து பேசிய BJP டெய்சி சரணின் மகள் ஷர்மிகா – மருத்துவ இணை இயக்குநர் எச்சரிக்கை.

0
731
sharmika
- Advertisement -

பாஜக கட்சியின் சிறுபான்மையின அணி தலைவரான டெய்சி சரண் ஆடியோ பாஜக கட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மகள் ஷர்மிகா சரண் பேசும் விடீயோகள் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தனியார் மருத்துவராக இருந்து வருபவர் ஷர்மிகா இவர் டெய்சி ஹாஸ்பிடல் என்ற யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். இந்த யூடியூப் சேனலை 8 லட்சத்திற்கும் மேலானோர் சப்ஸ்கிரைப் செய்து வைத்திருகின்றனர். இதில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் குறித்து பல விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் மாட்டுக்கறி சாப்பிட்டால் செரிமானம் ஆகாது, ஒரு கப் குலாப் ஜாமுன் சாபபிட்டால் மூன்று கிலோ எடை கூடும், நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், குப்பற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் பல கருத்துக்களை குறி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவர் கூறும் மருத்துவம் சரியா என்று தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் டாக்டர் பார்த்திபன் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது `ஷிர்மிகா ஒரு தனியார் மருத்துவராக ஷிசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடுவதில் தவறில்லை, ஆனால் அந்த பதிவு தவறானதாக இருக்கக்கூடாது. சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இறைச்சி சாப்பிட கூடாது என்று கூறவில்லை.

- Advertisement -

தன்னுடைய விருப்பத்திற்கேற்ப எந்த சத்தான உணவு தேவை படுகிறதோ அதனை உண்ணலாம்.மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. அதுபோலவே ஒரு கப் குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடையெல்லாம் கூடாது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 6 வேலை சாப்பிட்டால் கூட 3 கிலோ என்பது மிகவும் கடினம். மேலும் குப்பற படுத்தால் மார்பக புற்று நோய் வரும் என்று எந்த மருத்துவத்திலும் குறிப்பிட வில்லை.

ஒரு மருத்துவர் மருத்துவம் சம்மந்தப்பட்ட கருத்துக்களை மட்டும்தான் கூற வேண்டும் தன்னுடைய எண்ணத்தை திணிக்க கூடாது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு எப்படி தலைமை உள்ளதோ அதே போன்று சித்த மருத்துவத்திற்கும் தலைமை உள்ளது. அங்கு பதிவு செய்த பின்னர் தான் மருத்துவம் செய்ய வேண்டும். அதோடு அந்த அமைப்பில் பதிவு செய்த பரம்பரை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

-விளம்பரம்-

ஆனால் முறையாக படிக்காமலும், அமைப்பில் பதிவும் செய்யாமலும் தாங்கள் பரம்பரை மருத்துவர்கள் என்று கூறி மருத்துவம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.இது போன்று மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக ஷர்மிகா கருத்துக்களை தெரிவிக்கிறார் என்று பொது மக்களில் யாரவது இவரின் மீதி வழக்க பதிந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை நம்பி யாரும் ஏமாறவேண்டாம், தமிழகத்தில் சுமார் 1500 மேல் மருத்துவ மையங்கள் உள்ளன எனவே அங்கு சென்று ஆலோசனை பெற்றபின் முறையான சிகிச்சை பெற்று கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement