அடுத்த பர்னீச்சரை உடைக்க தயாரான பாலிவுட். லவ் டுடே படத்தின் இந்தி ரீ-மேக். ஹீரோ யார் தெரியுமா ?

0
595
- Advertisement -

சமீப காலமாகவே பாலிவுட்டில் பல்வேரு தமிழ் படங்கள் ரீமேக் ஆகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படமும் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தார் இயக்குனர்.

- Advertisement -

இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. பல சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லவ் டுடே படத்தின் பாலிவுட் ரீமேக்கில் வருண் தவான் நடிக்க இருக்கிறாராம். இதை கேட்ட தமிழ் ரசிகர்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே தமிழில் வெளியான ராட்சசன், காஞ்சனா, ஜிகிர்ந்தாண்டா, சிங்கம் என்று பல படங்களை ரீ மேக் என்ற பெயரில் இந்தியில் கொடுமை செய்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement