விஜய் சார் ரொம்ப அமைதியான டைப் இல்ல.. ஒரு நாள் நைட்..! தினேஷ் மாஸ்டர் ஓபன் டாக்

0
1131
vijay
- Advertisement -

நடன இயக்குநராக கிட்டத்தட்ட 18 வருடங்களாக சினிமாவில் இருக்கும் மாஸ்டர் தினேஷ், தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படம் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினேன்.

-விளம்பரம்-

dinesh

- Advertisement -

“ஒரு நடிகனா, இப்போ எப்படி உணர்றீங்க?”
“டான்ஸ் ஆடுறதும் நடிக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். டான்ஸ் ஆடும்போது நாம சில முக பாவனைகளெல்லாம் கொடுக்கணும். அந்த அனுபவம்தான், நமக்கு நடிப்புலேயும் உதவியிருக்கு. ‘ஒரு குப்பைக் கதை’ படம் சண்டை போடுறது, பொண்ணுங்க பின்னாடி சுத்துறது மாதிரியான சாதாரணமான கதையா இருந்திருந்தா, நடிக்க நான் ஓகே சொல்லியிருக்கமாட்டேன். இந்தப்படம் ஒரு தனி மனிதனோட சாதாரண வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கு. படம் பார்த்துட்டு பலபேர் திருந்துறதுக்கும் வழி இருக்கு. இன்னைக்கு மக்கள் அதிகமா சந்திக்கிற பிரச்னைகள்ல மிக முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படமா எடுத்துத்திருக்கோம்.

விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடவுள் எப்பவுமே சில விஷயங்களை நேரடியா கொடுக்காம, வேறு யார் மூலமாவது கொடுப்பார். அப்படி எனக்குக் கிடைச்சதுதான் விஜய் சார் படத்துல ‘ஆல்தோட்டா பூபதி’ பாடலுக்கு நடனம் அமைக்கிற வாய்ப்பு. தவிர, அவரோட ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல டான்ஸூம் ஆடியிருக்கேன். ‘ஷாஜஹான்’ படத்துல ‘மெல்லினமே மெல்லினமே’தான் விஜய் சாரோட எனக்கு முதல் பாடல்.

-விளம்பரம்-

dinesh master

அப்புறம், ‘தமிழன்’, ‘யூத்’, ‘வசீகரா’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’னு பல படங்களுக்கு விஜய் சாரோட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். ‘வசீகரா’ பாடல் ஷூட்டிங்கிற்காக நியூசிலாந்து போயிருந்தோம். அப்போ, கேமராமேன் பாலு சார், இருட்டுல இருக்க பயப்படுவார். தூங்கும்போதுகூட லைட்டை போட்டுதான் தூங்குவார். அவரை நானும் விஜய் சாரும் சேர்ந்து பயமுறுத்துவோம். விஜய் சார் ரொம்ப அமைதியான டைப்னு நினைக்கிறீங்க. அப்படிக் கிடையாது. அவர்கிட்ட பழகினா, வேற லெவல்ல தெரிவார்!”

Advertisement