நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் தயாரிப்பில் வெளியான “காக்க முட்டை” படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். தமிழில் வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் “வட சென்னை ” படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெருப்புட என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகர், பாடகர் என்ற பல திறமைகள் கொண்ட அருண் ராஜா காமராஜ் இயக்கி வரும் “கனா ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வெற்றியை தேடித்தரும். ஆனால் இதுவரை பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் குறைவே.அதனால் இந்த படத்தை பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் அருண் ராஜா.
படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடுத்தர குடும்பப்பெண் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா.
இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்ற மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.