பிக் பாஸ் டேனியல், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனியல். குறிப்பாக இவர் விஜய் சேதுபதியை பார்த்து, ‘பிரண்டு… லவ் மேட்டரு… பீல் ஆயிட்டாப்ல, ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல’ என்று பேசிய டயலாக் டேனியை பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.
அதைத்தொடர்ந்து இவர், யாமிருக்க பயமேன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் போன்ற பல ஹிட் படங்களில் காமெடி ரோலில் கலக்கினார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று மேலும் மக்களிடையே பரிட்சியமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய டேனியல், வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் தனது முன் கோபத்தால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
டேனியல் குறித்து:
மேலும் மிகவும் சேப் கேம் ஆடியதாக சில விமர்சனங்களுக்கு ஆள் ஆனார் டேனியல். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி, மேடையில் தனது காதலி டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். பல ஆண்டுகளாக டெலிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றும், ஆனால் திருமணத்தை கமல் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
டேனியல் திருமணம்:
பின் டேனி கூறியது போலவே வெளியே வந்ததும் தனது நீண்ட வருட காலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கூட தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்காக ரசிகர்கள் பலரும் டேனியல்- டெலிஷா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். பின் இவர்களுக்கு கேசன் ஹேய்ஸ் டேனியல் என்ற ஆண் குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்திருந்தது.
இரண்டாவது குழந்தை:
தற்போது டேனியல்- டெனிஷா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், ‘ எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் வருகையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் விலைமதிப்பற்ற ஆண் குழந்தை ‘ ஐசல் ஹேய்ஸ் டேனியல்’. எங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை நாங்கள் மகிழ்ச்சியோடும், நன்றி உணர்வோடும் வரவேற்கிறோம்.
மனைவிக்கு நன்றி:
இவை அனைத்திற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை என்று தனது மனைவி டென்னிஷாவை குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் டேனியல் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய படங்கள் அவருக்கு அமையவில்லை. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாம் குத்து, மாநாடு, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன ரோலில் டேனியல் நடித்திருக்கிறார்.