‘ஒரு வழியா நாங்க எதிர்பார்த்த வீடியோ வந்தாச்சு’ – தர்ஷா குப்தாவின் குளு குளு அந்தமான் ட்ரிப் வீடியோவை கண்டு ரசிகர்கள் குஷி.

0
1717
Darsha
- Advertisement -

முதன் முறையாக நீச்சல் உடையில் குக்கு வித் கோமாளி நடிகை வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும், இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை.

- Advertisement -

தர்ஷா சின்னத்திரை பயணம்:

ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக பேராதரவைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

தர்ஷா நடித்த படங்கள் :

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து இருந்தது.திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் தர்ஷா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ், ஜி பி முத்து உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நீச்சல் உடை புகைப்படங்கள் :

படங்களில் நாயகியாக நடித்து வந்தாலும் தர்ஷா குப்தா போட்டோ ஷூட்டை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீப காலமாக படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் அந்தமானுக்கு சுற்றுல்லா சென்றுள்ளார். அங்கே நீச்சல் உடையில் எடுத்த வீடியோவை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ‘இந்த புள்ளைக்கு சினிமா வாய்ப்பு கொடுங்கய்யா, வாய்ப்புக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு’ என்று கமண்ட் செய்து வருகின்றனர். அதே போல மற்றொருபுறம் ‘நாங்கள் எதிர்பார்த்த வீடியோ வந்துவிட்டது என்றும் கூறி வருகின்றனர். ‘

Advertisement