Walking Stick உதவியுடன் நடந்து வந்து பிரம்மாண்ட நிகிழ்ச்சியை தொகுத்து வழங்கிய DD – என்ன ஒரு டெடிகேஷன்.

0
654
dd
- Advertisement -

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாக்கிங் ஸ்டிக் வைத்து திவ்யதர்ஷினி நடந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. மேலும், டிடி தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

-விளம்பரம்-

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு வந்து விட்டார். பின் திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அதன் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அப்படியே டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதையும் பாருங்க : எங்கள் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை – கோவையில் முதல்முறையாக சான்றிதழ் வாங்கிய பெற்றோர்கள்.

- Advertisement -

டிடி திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து இருக்கிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

சோசியல் மீடியாவில் டிடி:

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி டிடி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதே போல travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவது வழக்கம். அங்கு எடுக்கும் புகைப்படம்,வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் போலோ செய்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக இவர் அதிக அளவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமாகவே இருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கமல் நடித்த விக்ரம் படத்தின் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார். அது போலவே விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டை அவர் தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவை டிடி மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

வாக்கிங் ஸ்டிக் கில் வந்த டிடி:

இந்த நிகழ்ச்சிக்காக டிடி மேடைக்கு நடந்து வரும்போது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக வருகிறது. ஏற்கனவே திவ்யதர்ஷினிக்கு காலில் பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதற்காக அவர் ஒரு சிகிச்சையும் பெற்று இருக்கிறார். அதன் காரணமாக தான் டிடி வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் தன்னுடைய வழக்கமான எனர்ஜி உடன் தொகுத்து வழங்கியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திவ்யதர்ஷினியை பாராட்டி இருந்தார்கள்

Advertisement