நடிகை சமந்தா நிலத்தில் கண்டெடுக்கபட்ட அழுகிய ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.!

0
3590
samantha

சினிமா உலகில் ஒரு குடும்பத்தில் ஒருத்தர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலே அதிசயம். அதுவும் நாகர்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவருமே சூப்பர் ஸ்டார்கள் தான்.இப்படி சினிமா துறையில் பேரும் புகழுடன் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கும் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு நடந்த சோகம். நடிகர் நாகார்ஜுனா,அவரது மனைவி அமலா,மகன் நாகசைதன்யா ,அவரது மனைவி சமந்தா ஆகியோருக்கு சொந்தமான பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலம் நாகர்ஜுனா குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமான நிலமாகவும்,மேலும், இது ஒரு விவசாய நிலமும் என்று கூறப்பட்டு வருகிறது.

Image result for samantha nagarjuna family

இந்த விவசாய நிலத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் எந்த ஒரு விவசாயமும் செய்யவில்லை என்று தெரியவருகிறது. இதனால் அவர்கள் சொந்த நிலத்திற்கு அடிக்கடி போகமாட்டார்கள். அந்தவகையில் அமலா மட்டும் செப்டம்பர் மாதம் மட்டும் ஒருமுறை போய் பார்த்துட்டு வந்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படி நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஆந்திரா போலீசார் நேற்று கண்டெடுத்தனர் இந்தச் செய்தி ஆந்திரா திரை உலகத்தையே புரட்டி போடும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : தர்ஷன் முன்னால் ஓட கூடாது என்பதர்க்காக லாஸ்லியா செய்த பித்தலாட்டம்.! உதவி செய்த கவின்.!

- Advertisement -

ஹைதராபாத் அருகே உள்ள கேசம் பேட்டை சார்ந்த போலீசார், பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்தது நேற்று இரவு திடீரென்று துர்நாற்றம் வீசியது என்று அருகிலுள்ள விவசாயிகள் நாகர்ஜுனாவின் நிலத்திற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தால் மிகவும் ரொம்ப மோசமான நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்தார்கள். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.இதனைத்தொடர்ந்து இன்று காலை கேசம்பேட் காவல் நிலையம் அதிகாரிகள் நாகர்ஜுனாவின் நிலத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Image result for samantha nagarjuna family

இதனால் நாகர்ஜூனாவின் மீது வழக்கு தொடர்வார்களா ? இல்லையா? என்ற பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன. இந்த சம்பவத்திற்கும் நாகர்ஜூனா குடும்பத்தினருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா இல்லையா ? என்று கூறப்பட்டு வருகிறது. இதன் விளைவாக திரை உலகில் இவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.ஒரு பக்கம் இவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிரிகள் செய்த வேலையாக இருக்கலாம் என்று பல வதந்திகள் சமூக வலைதலையங்களில் வைரலாக பரவி வருகின்றன.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement