பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஐம்பது படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
மேலும், பாலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோன். திருமணத்துக்கு பின்னரும் தீபிகா படுகோன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தீபிகா மற்றும் ரன்வீர் சிங்க் இருவரும் புதிய பங்களாவை வாங்கி இருப்பதாக தற்போது சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பெட்ரூம் உடன் கூடிய பிளாட்டில் இருவரும் வசித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : இது தான் நான் உன்னை எடுத்த கடைசி புகைப்படம் – தன் தோழியின் புகைப்படத்தை பதிவிட்ட யாசிகா.
தற்போது தீபிகா படுகோன் ரன்வீர் சிங்க் இருவரும் மும்பைக்கு அருகே 22 கோடி மதிப்பிலான புதிய பங்களாவை வாங்கி உள்ளார்கள். கடற்கரைப் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரம் இந்த பகுதியில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர். மேலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அளித்த தகவலின்படி தங்கள் நிதி நிறுவனங்களின் வருமானத்திலிருந்து இந்த பங்களாவை வாங்கி இருப்பதாகவும் இந்த ஒப்பந்தத்துக்கு இருவரும் 1.32 கோடி முத்திரை கட்டணமாக செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதனை உறுதி செய்யும் விதமாக தீபிகா படுகோனே ரன்வீர் சிங் பதிவு துறை அலுவலகத்துக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இது தவிர இவர்களுக்கு மும்பை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது