தெய்வமகள் சீரியல் வினோதினிக்கு போன் செய்த தல அஜித் ! என்ன சொன்னார் தெரியுமா ?

0
4648
Actor ajith

தெய்வமகள் சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை வினோதினி. இவர் இதற்கு முன்னர் சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் இவருக்கு அங்கீகாரம் கொடுத்தது.இவர் தல அஜித்துடன் பரமசிவன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது பற்றி தற்போது பேசியுள்ளார்.

vinithoini

அஜித் பற்றி நிறைய நடிகர் நடிகைகள் புகழ்ந்து பேசியுள்ளனர். அவரது குணத்தை பற்றியும் பலர் பேசியதை கேற்றுள்ளோம். அந்த செலிபிரிட்டிக்கள் பட்டியலில் தற்போது வினோதினி இணைந்துள்ளார்.அஜித் பிரபலம் ஆகாத காலத்தில் அவருடன் நடித்துள்ளேன். பரமசிவன் படத்தில் 5 நாட்கள் அஜித்துடன் நடித்துள்ளேன். அந்த சூட்டிங் நேரத்தில் அஜித் அனைவரிடமும் கேரிங்காக இருப்பார்.

தற்போதெல்லாம் சூட்டிங்கில் நம்முடன் யார் நடிக்கிறார் என்று கூட தெரியாமலேயே வந்து போகிறோம். ஆனால், பரமசிவன் பட சூட்டிங்கின் போது முதல் நாள் சூட்டிங் முடிந்த உடன் எனக்கு போன் செய்து என்னை பற்றி விசாரித்தார். நான் எங்கிருந்து வருகிறேன், இந்த இடம் சரியாக இருக்கிறதா? என பலவற்றை கேட்டறிந்தார் அஜித்.இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் வினோதினி