சிகிச்சையால் ஏற்பட்ட விபரீதம் – கொரமாக மாறிய நடிகையின் அழகான முகம். அப்படி என்ன சிகிச்சை செய்துள்ளார்கள் பாருங்க பாவம்.

0
322
swathi
- Advertisement -

பல் வலிக்கு சிகிச்சை பெற்ற கன்னட நடிகையின் முக அமைப்பு மொத்தமாக மாறி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட மொழியில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனவர் நடிகை சுவாதி. இவர் பெங்களூரில் ஜே.பி.நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி சுவாதியிடம் கூறியிருக்கிறார். அதன் பேரில் அந்த ஊசியை சுவாதி செலுத்தி இருக்கிறார். அதன் பின்னர் தான் சுவாதியின் முகம் வீங்கியது.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சுவாதியின் முகத்தின் அமைப்பை மாறி இருக்கிறது. இதனால் கடந்த 20 நாட்களாக சுவாதி வெளியே வரவில்லை. மேலும், சிகிச்சை அளித்த டாக்டர் இடம் தொடர்பு கொண்டு சுவாதி இதுகுறித்து கேட்டு இருக்கிறார். அதற்கு மருத்துவர், முக வீக்கம் விரைவில் சரியாகி விடும் என்று கூறுகிறார். இதை நம்பி சுவாதி ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார்.

ஆனால், தற்போது வரை சுவாதிக்கு முகம் வீக்கம் சரியாக சரியாகவில்லை. இதனையடுத்து சுவாதி பயந்து போய் மருத்துவரை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனையிலிருந்து யாருமே சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் சுவாதி மருத்துவமனை மீது குற்றம்சாட்டி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement