தலைவர் சொன்னா அது பொய்யா இருக்குமா ? உயிலில் குறிப்பிட்டது போல சிங்கப்பூர் பிரதமர் இறுதி அஞ்சலியில் ஒலித்துல தேவாவின் பாடல்.

0
522
- Advertisement -

சிங்கப்பூர் அதிபருக்கு பிடித்த தேவாவின் பாடல் குறித்து ரஜினிகாந்த் மேடையில் சொன்ன விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான். அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

-விளம்பரம்-

இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இருந்து ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

தேவாவின் இசைப்பயணம்:

அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார். பின் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தில் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களுக்கு இசை அமைத்தார். மேலும், இவர் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பாடியிருக்கிறார். சொல்லப் போனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த தேவாவின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது.

https://twitter.com/kadalaimuttaai/status/1594439768888475648

தேவா பிறந்தநாள்:

ஆரம்பத்தில் இவரை பலரும் தேவா என்று தான் அழைத்தார்கள். பின் இவருடைய இசையால் தேனிசைத் தென்றல் தேவா என்று அழைக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் கானா பாடல் பாடுபவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் மெல்லிசை பாடல்களையும் பல பாடியிருக்கிறார். இப்படி இவர் கானா மற்றும் மெலோடி இரண்டிலுமே கொடிகட்டி பறந்தவர். அனைத்து விதத்திலும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர் தேவாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டு இருந்தது. அவர் என்றும் நலமுடனும் இசையுடனும் நன்றாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தேவா இசை நிகழ்ச்சி:

இது அவரின் 72 ஆவது பிறந்தநாள். இந்த பிறந்த நாளை தேவா விமர்சையாக கொண்டாடி இருந்தார். மேலும், இந்த பிறந்த நாளில் இன்னும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியை பிளாக் ஷீப் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்களும், பாடகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தின் மாசான பிஜிஎம் போட்டு கோட் சூட் போட்ட நால்வருடன் மேடை ஏறி அரங்கை அதிர வைத்திருந்தார். அதில் அவர் தேவா குறித்து கூறியிருந்தது, சிங்கப்பூர் அதிபராக இருந்தவர் நாதன். இவர் தமிழர்தான் இருந்தாலும் மலேசியாவில் வாழ்ந்து இருந்தார்.

https://twitter.com/kadalaimuttaai/status/1594439768888475648

தேவா குறித்து ரஜினி சொன்னது:

அவர் இறப்பதற்கு முன் அவருடைய உயிரின் கடைசி ஆசையான சேரண் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் இடம் பெற்ற தேவா இசை அமைத்து வைரமுத்து வரிகளில் வந்த தஞ்சாவூர் மண்ணு பாடல் தனக்கு பிடித்த பாடல் என்று எழுதியிருந்தார். பின் தான் இறந்த பிறகும் அந்த பாடலை ஒலிக்க விட்டு அதன் பிறகு தனது உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்த பின்பு அவரது உடலை கொண்டு சென்ற போது உலக தலைவர்கள் முன்னிலையில் அந்த பாடல் ஒளிபரப்பப்பட்டது என்று கூறி இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement