அவர் கத்துகொடுத்த வித்தைதான் என்ன காப்பாத்துது – ஆருர்தாஸ் மறைவு குறித்து Ms பாஸ்கர் உருக்கம்.

0
262
msbaskar
- Advertisement -

வசன எழுத்தாளர் ஆருர்தாஸ் மறைவிற்கு நடிகர் எம் எஸ் பாஸ்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வசனகர்த்தாவாக இருந்தவர் ஆருர்தாஸ். இவருடைய சொந்த ஊர் திருவாரூர். இவர் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். இவர் எழுதியவற்றில் அதிகம் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு தான்.

-விளம்பரம்-

இதுவரை இவர் 500 திரைப்படங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பாடல்களையும் எழுதி இருக்கிறார். இப்படி தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற கவிஞராக இருந்த ஆருர்தாஸ் வயது மூப்பின் காரணமாக இன்று காலமாகி இருக்கிறார். தற்போது இவருக்கு 91 வயது ஆகிறது. இவருடைய மறைவிற்கு தமிழ் திரை உலக பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆருர்தாஸ் நினைவுகள் குறித்து நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

- Advertisement -

எம் எஸ் பாஸ்கர் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறி இருந்தது, ஐயா! ஆருர்தாஸ் அவர்கள் டப்பிங்கில் எனக்கு குரு. அவர் எனக்கு டப்பிங் கற்றுக் கொடுத்த ஆசான் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் கே பாலாஜி சாரோட சந்தேகக் கண்கள் படத்தின் டப்பிங் வேளையில் தான் நான் அவரைப் பார்த்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப்பான படம் அது. அய்யாவுக்கு சொந்த ஊர் திருவாரூர். எனக்கு முத்துப்பேட்டை. அதனால் என் மீது அவருக்கு தனி பாசம் உண்டு. சந்தேக கண்களில் இருந்து அவர் எழுதும் படங்கள் அத்தனைக்கும் வரிசையாக நான் பேசிட்டு வந்திருக்கிறேன்.

ஆருர்தாஸ் குறித்து சொன்னது:

டப்பிங் போது எப்படி பேசணும்? உதட்டை எங்கே மூடனும்? சவுண்டு எந்த இடத்தில் அதிகமாக கொடுக்கணும், குறைவாக கொடுக்கணும்? எப்படி அழுத்தி பேசணும்? இப்படி தொழில் ரீதியாக பல ரகசியங்களை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கற்றுக் கொடுத்த வித்தைகள் தான் இன்று வரை என்னை சினிமாவுலகில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இவர் எம்ஜிஆர், சிவாஜி அவர்களின் படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். சொல்லப்போனால், வசனங்களை வாரி வாரி எழுதிய வள்ளல் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

ஆருர்தாஸ் உடல்நிலை:

அதற்குப் பிறகு நான் சினிமாவுலகில் நடிகனான பிறகு அவருடைய படங்களுக்கு டப்பிங் பேச நேரம் அமையவில்லை. அதேபோல் அவருடைய துணைவியார் மறைவிற்கு பிறகு அவர் ரொம்ப உடைந்து போய்விட்டார். என்னுடைய மகள் திருமணத்தின் போது அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க அவரை சந்தித்தேன். வயது மூப்பின் காரணமாக வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. உன் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்று வாழ்த்தி இருந்தார். பின் கொரோனா காலகட்டம் என்பதால் அவரும் யாரையும் சந்திக்க மறுத்தார். நானும் அவருடைய வயது காரணமாக அவரை சந்திக்காமல் இருந்தேன்.

மறைவு குறித்து சொன்னது:

என்னுடைய மகள் திருமணம் முடிந்த பிறகு அவரை போய் பார்த்தேன். ஆசீர்வதித்தார். பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும், குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும், தாத்தாவாகவும், என்னை போன்றோருக்கு ஆசனாகவும், நடிகர் திலகத்தின் மீதும், மக்கள் திலகத்தின் மீதும் மாறாத பற்று கொண்டவராகவும் வாழ்ந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இருந்தாலும், அவருடைய ஆன்மா என்றென்றும் நம்மளை வழிநடத்த வேண்டும். வழி நடத்தும் என்று நம்புகிறேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement