இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு புனை பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ். தி கிரே மேன் படத்தின் மூலம் தோன்றி உலக சினிமா ரசிகர்களை வியக்கும் வைகையில் தன் நடிப்பை நேர்தியாக வெளிபடுத்தினார்.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து இருந்தார். தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
தி கிரே மேன் :-
இந்த படத்துக்காக பல நாட்களுக்கும் மேலாக தனுஷ் அவர்கள் தீவிரமான புரமோஷன் செய்து இருந்தார். மேலும், தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு சிறிய கதாபாத்திரம் தான் கொடுக்கப்படுகிறது. அதிக எதிர்பார்ப்புடன் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்று சொல்லலாம்.அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது.
தனுஷ், செல்வராகவன் கூட்டனி :-
செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போதைய நிலையில் நடிகர் தனுஷ் இந்தியா சினிமாவில் பிஸியா இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் அந்தளவுக்கு படு பிஸியாக உள்ளார்.
திருச்சிற்றம்பலம் :-
தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். அதோடு இந்த பாடல் வெளியாகி 4 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது
தி கிரே மேன் 2 :-
தி கிரேட் மேன் படத்தில் குறுகிய நேரத்தில் மட்டுமே தனுஷ் நடித்த இந்த காட்சி வந்தது ஆர்வமுடன் படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக தி கிரேட் மேன் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட போவது உறுதியானது. தி கிரேட் மேன் படத்தில் தனுஷ் அவரின் ஆக்சன் காட்சிகள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இருந்தது இதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை தனுஷின் நடிப்பை பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் தனுஷின் நடிப்பு திறனை பார்த்து வியந்து போனார்கள் ஹாலிவுட் வட்டார நடிகை, நடிகர்கள் அவர்களும் தனுஷை பாராட்டிய வருகின்றனர்.ஆகையால் தி கிரேமென் படத்தில் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் அதே கேரக்டரில் நடிக்கின்றார் இந்த செய்தியை தனுஷ் அதிகாரப்பூர்வமாக தனது டூவீட்டர் பக்கத்தில் இதோட ஒரு ஆடியோவையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார்.