கோட் சூட்டில் தனுஷ், புடவையில் டாப்ஸி- ஆடுகளம் படத்தில் வராத செம லுக். புகைப்படம் இதோ.

0
1764
aadukalam

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தனுஷ், டாப்ஸி பண்ணு, கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கேபி கருப்பு எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பார். தனுஷின் சினிமா வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமாக இந்த படம் அமைந்தது. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் அவர்கள் தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு கமர்சியல் படம்.

சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்ட இந்தப்படம் மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை கண்ணுக்கு முன்னே நிறுத்தியது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. அதிலும் ‘வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா’ என்னும் பாடல் தான் செம ஃபேமஸ் ஆனது என்று சொல்லலாம்.

- Advertisement -

இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் நடிகை டாப்ஸி நடித்து இருப்பார். தமிழ் சினிமாவில் நடிகை டாப்ஸியின் முதல் படமும் ஆடுகளம் தான். இந்நிலையில் ஆடுகளம் படத்தின் போது நடத்திய போட்டோ ஷுட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் கோர்ட் சூட்டிலும், டாப்ஸி அவர்கள் புடவையிலும் இருக்கும் மாதிரியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த புகைப்படம் எதுவுமே படத்தில் காண்பிக்கப் படவில்லை. இதில் இவர்கள் இருவருமே மிக அழகாக உள்ளார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிங்கர் தனுஷ். சினிமா உலகில் இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், ஹிந்தியில் அத்ரங்கி ரே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை டாப்சி. இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். நடிகை டாப்சி அவர்கள் தற்போது ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Advertisement