கையில் சிகிரெட், வாயில் புகை – மேகா ஆகாஷா இது ? ரசிகர்களை ஷாக்காக்கியா புகைப்படம் இதோ.

0
531
megha-akash
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் மிக பிரபலமாக திகழ்பவர் மேகா ஆகாஷ். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு உருவான ஒரு பக்கா கதை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். ஆனால், அந்த படம் வெளிவர தாமதம் ஆனதால் 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லை என்ற படத்தின் மூலம் தான் மேகா சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தில் நிதின் குமாருக்கு ஜோடியாக சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா சைதன்யா என்பவர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மீண்டும் நடிகர் நிதின் குமாருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Megha-Akash

அதற்கு பிறகு நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, திரிஷா, சசிகுமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் மேகா ஆகாஷ் நடித்திருந்தார். தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

- Advertisement -

என்னை நோக்கி பாயும் தோட்டா:

இதனை தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தில் வெளிவந்த ‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே பாடல் மூலம் இவருக்கு செம்ம ரீச் கிடைத்தது. மேலும், அந்த பாடலை தொடர்ந்து இவர் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருந்தார்.

மேகா ஆகாஷ் நடித்த படங்கள்:

பிறகு இவர் வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதோடு சினிமா உலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகை மேகா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதுவும் தமிழில் அறிமுகமான ஒரே ஆண்டிலேயே நான்கு படங்கள் நடித்து இருந்தார் என்பது பெரிய விசயம் தான். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சொந்த தயாரிப்பில் நடிக்கும் மேகா ஆகாஷ்:

தற்போது அவர் கைவசம் 4 படங்கள் இருக்கிறது. இந்நிலையில் இவர் நடித்திருக்கும் புது படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த தகவல் ஏற்கனவே சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. மேலும், இவருடைய அம்மா பிந்து ஆகாஷ் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் மேகா ஆகாஷ் நடிக்கும் புது படத்தின் போஸ்டர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதில் மேகா புகை பிடித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று சொல்லலாம்.

மேகா ஆகாஷ் நடிக்கும் படத்தின் போஸ்டர்:

இந்த படத்தினை இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் அசிஸ்டன்ட் அபிமன்யு பட்டி தான் இயக்குகிறார். மேலும், வெளிவந்த போஸ்டரில் மேகா ஆகாஷ் கையில் சிகரெட் இருப்பது போலவும், அதிலிருந்து சிதறிய சாம்பல் போல ஒரு நபர் கீழே விழுவது போலவும் காட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்கள். இப்படி மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கும் படத்தின் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement