எங்கப்பா ஒரு குரூப் போட்டோல கூட மருமகன் தனுஷ கானோம்.! இதான் காரணமா.!

0
1344
soundarya-visagan
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் இன்று அதாவது பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை என்பவரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா.

-விளம்பரம்-

விசாகன் ‘வஞ்சகர் உலகம் ‘ என்ற படத்தில் நடித்துள்ளார் மேலும், இவருக்கு கனிகா என்ற பெண்ணுடன் ஏற்கனவேய திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருமணம்.

- Advertisement -

இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வின் போது எடுக்கபட்ட பல்வேறு புகைப்படங்களும், விடீயோக்களும் வெளியானது.

ஆனால், ரஜினி குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட ஒரு குரூப் புகைப்படத்தில் கூட ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ் தென்படவிலை. இதனால் தனுஷ் திருமணத்திற்கு வந்தாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த திருமணத்தில் தனுஷ் கலந்து கொண்டது உண்மை தான்.

-விளம்பரம்-

ஆனால், நடிகர் தனுஷ் தற்போது ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கெட்டப்பை மிகவும் ரகசியமாக வைத்து வருகிறாராம் தனுஷ். இதனால் தான் குரூப் புகைப்படத்திற்கு கூட தனுஷ் போஸ் கொடுக்கவில்லையாம். இருப்பினும் தனுஷ் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement