கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தடையற தாக்க நடிகை.! புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆடிடுவீங்க.!

0
672
mamtha-mohan-das

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘மாயோகம்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.

அதன் பின்னர் தமிழில் குசேலன், தடையற தாக்க, குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பையும் தாண்டி இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல பின்னணி பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சிம்பு நடித்த காளை படத்தில் ‘காள காள’ பாடலையும் விஜய் நடித்த வில்லு படத்தில் ‘டாடி மம்மி’ பாடலையும் இவர் தான் பாடினார்.

தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிக்ரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இவருக்கு 2011 ஆம் ஆண்டு ப்ரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை விவாகரத்து செய்துவிட்டார்.

ஆம், மம்தா மோகன் தாஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் தான். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கேன்சர் நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் #10yearschallenge சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர மம்தா மோகன் தாஸ்
கடந்த 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு எதிர்கால கனவுகளை இழந்து, பின் நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறி மொட்டை தலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.