அன்னிக்கி தமிழ் சினிமாவின் டிகாப்ரியோனு சொன்னதுக்கு கலாய்ச்சீங்களே டா சொம்பைங்களா- தனுஷ் பட இசையமைப்பாளர் ட்வீட்.

0
1607
dhanush
- Advertisement -

இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

-விளம்பரம்-

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.

- Advertisement -

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதுவும் உலக அளவில் பிரபலமடைந்த அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான மார்வெலின் முக்கிய பிளாக்பஸ்டர்களான ‘கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ச்சர்’, ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ போன்ற படங்களை இயக்கியவர்கள் ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸுக்காக ‘The Gray Man’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளனர். சில நாட்களுக்கு முன்தான் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ரையன் காஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டீ அர்மாஸ் ஆகிய பிரபல நடிகர்கள் நடிப்பார்கள் என அறிவித்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ். தற்போது இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் நம்ம தனுஷும் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்த படத்தில்  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த ஜெசிகா ஹென்விக், நார்கோஸ் தொடரில் நடித்த வேக்னர் மௌரா மற்றும் ‘Once Upon a Time in Hollywood’ படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரமானஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Sean Roldan - Movies, Biography, News, Age & Photos | BookMyShow

மேலும், தனுஷ் இந்த படத்தில் இணைந்ததற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி 2, ஜோக்கர் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தனுஷ் தான் தமிழ் சினிமாவின் டிகாப்ரியோ என்று மூன்று வருடங்களுக்கு தான் குறிப்பிட்ட போது அப்போது எல்லாரும் கலாய்ச்சீங்களே டா சொம்பைங்களா என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement