மீண்டும் ஒரு அசுரனா ‘கர்ணன்’ – முழு விமர்சனம் இதோ.

0
10431
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த படத்தை பற்றிய விமர்சத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

கதை :

- Advertisement -

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’.

ஒரு சாலையில் ஒரு இளம் பெண் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறார். சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்க, அவரை யாரும் கண்டுகொள்ளாமல் செல்கின்றனர். அவர் துடித்துக் கொண்டு இருக்கும்போதே இறந்து விடுகிறார். உடனே கேமரா ஆகாயத்தை நோக்கி செல்கிறது. அதன்பின்னர் இணையத்தில் ஹிட்டடித்த ‘கண்டா வர சொல்லுங்க’ பாடல் ஒலிக்கிறது. மக்கள் அனைவருமே கர்ணனை வரச்சொல்லுங்க என்று ஆர்ப்பரிக்க ஒரு ஆரவாரத்தோடு தொடங்குகிறது இந்த படம்.

-விளம்பரம்-

கால்கள் முழுக்க ரத்தம் சொட்ட சொட்ட போலீஸ் பூட்ஸ் கால்கள் கர்ணனின் கால்லை அழுத்திக்கொண்டு முகத்தில் ஒரு கருப்பு துணியால் மறைக்கப்பட்டு கர்ணனை காண்பிக்கிறார்கள். அப்படியே படம் 1997 – ற்கு சென்று, கர்ணன் யார் ? அவரை ஏன் ஊர் மக்கள் அனைவரும் ஹீரோ போல கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழ வைத்து படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம்மை படத்தோடு அழைத்து சென்றுவிடுகிறார் மாரி செல்வராஜ்.

பொடியன்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் ஊரில் சில அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுவதை எண்ணி அடிக்கடி முறையிடுகின்றனர். அதில் ஒரு முக்கிய விஷயமாக தங்கள் ஊரில் பேருந்து நிறுத்தம் கூட இல்லை, தங்கள் ஊரில் பேருந்து கூட நிற்பது கிடையாது என்று போராடி வருகின்றனர். அதற்கு காரணம் இவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மேலூர் என்ற ஊரில் இருக்கும் உயர் சாதிகாரர்கள் தான்.

எப்போதும் பொடியன்குளம் மக்கள் அனைவரும் தங்களை நாடியே இருக்க வேண்டும் என்பதர்க்காக பொடியன்குளம் மக்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் தடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் பொடியன்குளத்தில் தைரியமான இளைஞசராக இருக்கும் கர்ணன், தங்கள் ஊர் பிரச்சனைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து வைக்க நினைக்கிறார். குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன். இறுதியில் பொடியன்குளம் மக்களுக்கு கர்ணன் என்ன செய்தார், தன் ஊர் மக்களின் உரிமைக்காக மேல் சதிக்காரர்கள் எதிர்ததால் கர்ணன் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

பிளஸ் :

படத்தின் முக்கியமான பிளஸ் என்றால் படத்தின் கதாபாத்திர தேர்வு தான். நடிப்பு அசுரன் என்று ஏற்கனேவே நிரூபித்த தனுஷை விட்டுவிடுவோம். ஆனால், படத்தின் வரும் லால் மற்றும் சில நடிகர்களின் நடிப்பு தனுசுடன் போட்டி போடுகிறது.

இரண்டாவது பலம் என்றால் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் தான்.

அடுத்தபடியாக இது 1997 -ல் நடக்கும் படம் என்பதால் அதனை உணர்ந்து தத்ருபமாக காட்டிய ஆர்ட் டைரக்டருக்கும், அதனை படமாக்கிய கேமராவிற்கு படத்தின் மிகப்பெரிய பங்குண்டு.

அசுரன் படத்தின் இருப்பது போல படத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் பல காட்சிகள் உள்ளது.

தனுஷ் மற்றும் லால் போலவே, படத்தில் நடித்துள்ள நாயகிரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி ஆகியோர்களின் நடிப்பும், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பில் மாரி செல்வராஜின் நேர்த்தி தெரிகிறது.

மைனஸ் :

பிடத்தில் மைனஸ் என்று சொல்ல பெரிதாக இல்லை என்றாலும், படம் கொஞ்சம் நீளமாக செல்வது போல ஒரு பீல்.

ஏற்க்னவே ரஞ்சித்,மாரி செல்வராஜ், வெற்றி மாறன் ஆகியோர் எப்போதும் தங்கள் படங்களில் மேல் சாதியினரை தவறாக சித்தரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த படமும் அதயே தான் காண்பித்து இருக்கிறது.

இறுதி அலசல் :

இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்து உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கும் அவருக்கு தேசிய விருது கொடுத்தாலும் தகும். மாரி செல்வராஜின் சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறை இந்த படத்திலும் தெளிவாக தெரிந்தாலும். இந்த படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறை சொல்லும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் கர்ணன் உரிமையை மீட்டெடுக்க வந்துள்ள மற்றொரு அசுரன். படம் ஒரு பிளாக் பஸ்டர் என்பது நிச்சயம்.

Advertisement