150 கோடி செலவில் தனுஷ் கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா ? முதல் முறையாக வெளியான Home Tour.

0
847
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடித்த படங்கள் பல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. இந்த நிலையில் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மக்கள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் தனுஷ் காட்டிவரும் வீடு பற்றிய தகவல் த்ற்போது கிடைத்துள்ளது.

- Advertisement -

தனுஷ் புதிய வீடு :

தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் இருக்கும் அதே போயஸ் கார்டன் பகுதியில் தான் அவரது மருமகன் தனுஷ் வீடும் அமைந்துள்ளது. தனுஷ் வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கி தீபாவளிக்கு முடிவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுமான பணி நழிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த வீட்டு பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் அவரது மனைவியை ஐஸ்வர்யா போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வைரல் வீடியோ :

இந்நிலையில் தற்போது கடுமையான பணிகள் முடிவடைந்தது கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் கடந்த மகா சிவராத்திரி அன்று கூட இந்த புது வீட்டில் தான் நடிகர் தனுஷ் பல பூஜையில் செய்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீடு கட்டி முடிந்து பிறகு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நவீன வசதிகள் :

அந்த விடியோவை வைத்து பார்க்கும் போது தனுஷ் வீடு மூன்று மாடி கட்டிடமாக உருவாகி இருக்கிறது. வீடுமுழுவதும் இன்றய நவீன உலகத்திற்கு ஏற்ப அதற்கு தேவையான பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல CCTV கேமராக்கள் இருக்கின்றன. அதோடு வீடு முழுவதும் வெள்ளை பளிங்கு கற்கள் கொண்டு வடிவமைத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு வெண்மையாக இருக்கிறது. இந்த வீட்டில் எட்டு படுக்கை அறைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.

150 கோடி :

இவற்றோடு சிறிய திரையரங்கம், வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வீட்டின் பல இடங்களில் விலையுயர்ந்த கண்ணாடியினால் வடிவைமைக்கப்பட்டுள்ளது. அதோடு மரவேலைப்பாடுகள், படி ஏறும் இடத்தில் அழகான ஓவியங்கள் என பார்த்து பார்த்து இந்த வீட்டினை கட்டியிருக்கின்றனர். இந்த வீடு மொத்தமாக ரூபாய் 150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் வீட்டின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement