தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் இட்லி கடை.

இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் கலக்கி கொண்டு வருகிறார். கடைசியாக நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கர. இது தனுஷ் உடைய 54வது படம். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருந்தார்.
தனுஷ் குறித்த தகவல்:
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இதை அடுத்து தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையின் மும்முரமாக களமிருக்கிறார். அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் தனுசுடன் மம்முட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

தனுஷ் இயக்கம்:
இவர் இயக்கிய இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. குறிப்பாக, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷினுடைய அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் பற்றி அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோவாகும் யாத்ரா:
அதாவது, தனுஷ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் இவருடைய மூத்த மகன் யாத்ரா தான் ஹீரோவாக நடித்திருக்கிறாராம். இந்த படத்தை தனுஷினுடைய டி55 படத்தின் தயாரிப்பு நிறுவனமான R டெக் சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இது ஒரு மாஸ் கமர்சியல் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது






