தனுஷ் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்..!அப்போ ‘வட சென்னை 2’ இல்லையா..!

0
798
dhanush
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாரி ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘அசுரன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதன் மூலம் நான்காவது முறையாக வெற்றிமாறனுடன் கை கோர்த்துள்ளார் தனுஷ்.

இதையும் படியுங்க : வடசென்னை படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

- Advertisement -

வடசென்னை’ படத்தை 2 பாகங்களாகத் திட்டமிட்டார் வெற்றிமாறன். அதனை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸிலும் உறுதிப்படுத்தினார். ஆனால், 2-வது பாகத்துக்கு முன்னதாக, மற்றொரு கதையில் வெற்றிமாறனும், இறங்கியுள்ளனர்.

தனுஷ் இயக்கி, நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்துக்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படங்களிலேயே குறுகியகால படமாக ‘அசுரன்’ இருக்கும் எனத் தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement