கொல மாசாக வெளியான தனுஷின் 50வது படம் டைட்டில்- என்னன்னு நீங்களே பாருங்க!

0
2342
- Advertisement -

தனுஷின் ஐம்பதாவது படத்தின் டைட்டில் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி.

- Advertisement -

தனுஷ் திரைப்பயணம்:

இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷின் ஐம்பதாவது படம் :

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவே ஏற்கனவே போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் டைட்டில் :

இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படத்தின் டைட்டில் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, தனுஷ் அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு ராயன் என்று டைட்டில் பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தினுடைய பூஜை சத்தமே இல்லாமல் ஈசிஆரில் நடைபெற்று இருக்கிறது. அது அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த படத்தின் டீசரை வெளியிடப் படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த படம் வட சென்னையை மையப்படுத்தி எடுப்பதாகவும், பழிவாங்கும் கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

தற்போது ராயன் படத்திற்கான பிரம்மாண்ட செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதோடு 90 நாட்களிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், அக்டோபர் மாதத்திற்குள் முழு படப் படிப்பையும் தனுஷ் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement