மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் கே.வி.ஆனந்த். புகைப்பட பத்திரிகையாளரான இவர் ஆரம்ப காலத்தில் கல்கி, இந்தியா டுடே போன்ற பல்வேறு தேசிய பத்திரிகைகளில் வேலை செய்திருக்கிறார். பின்னர் இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராம் இடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார்.
பி.சி.ஸ்ரீராமிடடம் பணியாற்றியபோது பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிசி ஸ்ரீராமை அணுகியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் ஆகியிருக்கிறார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கேவி ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. மேலும், கே வி ஆனந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
கே வி ஆனந்த் திரைப்பயணம்:
அதிலும், குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களாக முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. அதை தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், பிரித்திவிராஜ், கோபிகா நடிப்பில் வெளிவந்த கனா கண்டேன் திரைப்படம் மூலம் தான்.
கே வி ஆனந்த் மரணம்:
அதன் பின்னர் இவர் அயன், கோ,மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இதனை எடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக இவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். இருந்தும், சிகிச்சை பலனின்றி கே வி ஆனந்த் காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
கே வி ஆனந்தின் மகளின் திருமணம்:
இந்த நிலையில் மறைந்த இயக்குனர் கே வி ஆனந்தின் மகளின் திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவருடைய மகளின் பெயர் சாதனா ஸ்ரீ. இவருக்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் விஷ்ணுராஜ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் இருவருமே ஆர்க்கிடெக் படித்திருக்கிறார்கள். மேலும், கே வி ஆனந்த் மகளின் திருமணம் எலும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் இன்று காலை சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பிரபலங்கள்:
இந்த திருமண விழாவில் இயக்குனர் மணிரத்தினம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். பின் மறைந்த இயக்குனர் கே வி ஆனந்த் மகளின் திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.