காயத்ரிக்கு கெட் அவுட்டு, தீனாவிற்கு கட் அவுட்டு – அண்ணாமலை அதிரடி அறிக்கை. என்ன பதவி தெரியுமா ?

0
396
dheena
- Advertisement -

நடிகை காயத்ரி ரகுராம் வகுத்த பதவியில் இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்திரி தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இடையில் இவர் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இறுதியாக, இவர் தமிழில் வெளியான யாதுமாகி நின்றார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

- Advertisement -

காயத்திரி ரகுராம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் காயத்திரி ரகுராம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னரும் இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து காயத்திரி ரகுராம் bjpயில் இணைந்தார். சமீப காலமாக காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இவர் அந்த கட்சியின் கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியாக இருந்தார். அதன் பின் இவர் பல சர்ச்சைகளில் சிக்கிருக்கிறார். அதுவும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் விவகாரம் சமீபத்தில் தான் வெட்ட வெளிச்சம் ஆகி இருந்தது.

பாஜகவில் காயத்திரி ரகுராம்:

இதனால் கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பல பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அப்போது மாநில தலைவர் அண்ணாமலை தான் புதிய தலைவர்களை தேர்வு செய்து இருந்தார். அதில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி பெயரை நீக்கி இருந்தார். இதனை அடுத்து அந்த பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். பின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார்.

-விளம்பரம்-

பதவி நீக்கம்:

மேலும், பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரனை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கடுமையாக பேசியிருந்தார். இதனை அடுத்து காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியை களங்கம் விளைவித்தும் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி பாஜகவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கி இருக்கிறார்.

நியமனம் செய்யப்பட்ட இசையமைப்பாளர்:

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் வகுத்த பதவிக்கு இசையமைப்பாளர் தீனாவுக்கு பாஜக கட்சியில் பொறுப்பு கிடைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் இசையமைப்பாளர் தீனாவும், துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி நியமனம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement