“சினிமால எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுங்க ” – கேப்டனை போல பேசிய இந்திய முன்னாள் கேப்டன்.

0
1837
- Advertisement -

எல்ஜிஎம் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தோனி பேசி இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி . இருக்கிறார். அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தோனி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மற்றும் பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுத்து இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு Let’s Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர். சுருக்கமாக LGM என அழைக்கிறார்கள்.

- Advertisement -

எல்ஜிஎம் படம்:

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், இவானா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தோனியும் அவருடைய மனைவி சாக்ஷியும் கலந்து கொண்டிருந்தார்கள்.

எல்ஜிஎம் ஆடியோ வெளியீட்டு விழா:

அப்போது விழாவில் தோனி கூறி இருந்தது, என்னுடைய டெஸ்ட் அறிமுகமே இங்கு சென்னையில் தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை நான் சென்னையில் தான் செய்தேன். என்னுடைய வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில் தான் நடந்திருக்கிறது. எங்களுடைய முதல் தயாரிப்பாக எல்ஜிஎம் படத்தை எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த குழுவும் ஒத்துழைத்ததால் தான் இந்த படத்தை குறுகிய காலகட்டத்தில் எங்களால் எடுக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விழாவில் தோனி சொன்னது:

சில அறிமுகங்களும் இருக்கிறார்கள். உங்களுக்கு படத்தை பார்த்தால் ஒரு விஷயம் புரியும். நதியா கண்ணாலயே நிறைய நடித்திருக்கிறார். நிறைய உணர்வுகளை அப்படியே தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஆன கதை தான் எல்ஜிஎம். இரண்டு பெண்களுக்கு நடுவில் ஹரீஸ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார். அதோடு நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பல வேலைகளில் இறங்கிய போது ஒன்றை மட்டும் தான் உறுதியாக சொன்னேன். கிரிக்கெட் ஆடும் போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்ப்போம்.

உணவு குறித்து சொன்னது:

அதுபோல இங்கேயும் எல்லோருக்கும் முறையான நல்ல சாப்பாட்டை கொடுக்க சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். மேலும், எல்ஜிஎம் படம் குழந்தைகளுடன் சென்று பார்க்க கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதோடு கல்யாணம் ஆனவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்று ஜாலியாக பல விஷயங்களை பேசி இருந்தார்.

Advertisement