படையப்பா படத்தில் ரஜினியின் இரண்டாம் மகளாக நடித்தவர் யார் தெரியமா ? இத்தனை படத்தில் நடித்திருக்காரா ?

0
3067
anitha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் விஜயகுமாரின் மகள் என்பது தெரியும். மற்றொருவர் யார் தெரியுமா ? அவர் பிரபல பாடகியான அனிதா வெங்கட் தான். இவர், தமிழில் காஞ்சனா 2 வெற்றிவேல் போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார். அது போக தெய்வமகள் சீரியலில் கூட நடித்திருக்கிறார்.

இவர் படையப்பா படத்தில் நடித்ததற்கு முன்பாகவே, 1997 ஆம் ஆண்டு வெளியான ‘ஆஹா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக, ஒரு கால் ஊனமுற்ற நடிகையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னர் இவர் இசை நிகழ்ச்சி செய்த நிகழ்ச்சி ஒன்றில் கேமரா மேனகா பணியாற்றியவர் மூலம் தான் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், இவரோ அப்போது சின்னப்பெண் எனபதால் தனது தந்தையுடன் கேட்க சொல்லி இருக்கிறார்.

இதையும் பாருங்க : நாளை பிக் பாஸ் துவங்க இருக்கும் நிலையில் நான் பிக் பாஸ் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்த இளம் நடிகை.

- Advertisement -

ஆரம்பத்தில் இவரது தந்தையும் சினிமா எல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், ஆஹா படத்தில் ஒரு அக்மார்க் ஐயங்கார் பெண் தேவை என்று சொன்ன பிறகு தான் இந்த படத்தில் தனது மகளை நடிக்க வைத்தாராம். அதன் பின்னர் ஒரு முறை ஆஹா படத்தில் நடித்த விஜயகுமார், ரஜினியை பார்க்கப் போகிறேன் நீயும் வரியா என்று அனிதாவிடம் கேட்ட போது அவரும் சரி என்று விஜயகுமாருடன் சென்று ரஜினியை பார்த்துள்ளார்.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

அப்போது ரஜினி பார்க்கையில் ரஜினியிடம், விஜயகுமார் இவரை அறிமுகம் செய்து இருக்கிறார். அப்போது ரஜினி இவரிடம் என் பெண்ணாக நீ நடிக்கிறயா என்று கேட்டாராம். அப்போது சின்னப்பெண்ணாக இருந்த இவர் ‘ஹ்ம் கூப்டா நான் நடிக்கிறேன்’ என்று ரஜினியிடமே கூறியுள்ளாராம். அதன் பின்னர் தான் இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்தாராம்.

-விளம்பரம்-
Advertisement