மீண்டும் படம் துவங்கிய குஷியில் பாலாவை கலாய்த்த துருவ்.! கொஞ்சம் ஓவர் தான்.!

0
720
Adithya-Varma
- Advertisement -

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், கடந்த 14 ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக இருந்தது.

பின்னர் சில பல காரணத்தால் இந்த படம் கைவிடபடுவதாக அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தை தற்போது இந்த படத்தை
‘அர்ஜுன் ரெட்டி’படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில் இயக்குகிறார். .

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல் நாட்டின் லிப்ஸன் நகரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகலில் நடைபெற்று வருவதாகவும் மேலும் 65% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதே புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட துருவ்,
இரண்டாவது முறை செய்யும் காரியம் சிறப்பாக வராது என யார் சொன்னார்?  என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பாலாவை கலாய்ப்பது போல இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement