வீட்டில் அடுத்த விசேஷம், விறுவிறுப்பாக அழைப்பிதழ் கொடுக்கும் ஷங்கர் – என்ன தெரியுமா ?

0
897
aditi
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர் .இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் :

தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு புதுச்சேரி ரஞ்சி அணி கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.

அதிதிக்கு திருமணமா :

ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் வரும் கடந்த ஆண்டு (ஜூன் 27, 2021) அன்று மகாபலிபுரத்தில் படு பிரமாண்டமாக நடைபெற்றது. .இப்படி ஒரு நிலையில் தா ஷங்கரின் மற்றொரு மகளான அதிதி, முத்தய்யா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் அதிதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

உண்மையான காரணம் இது தான் :

இயக்குனர் ஷங்கர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருவதால் அவரது இரண்டாவது மகளுக்கு திருமணம் என்ற வதந்தி இணையதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதனை வைத்து அவரது இரண்டாவது மகள் அதிதிக்கு திருமணம் என தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அதில் எந்தவித உண்மையும் இல்லை ஷங்கர் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

aditi

சிம்புவுடன் இணையும் அதிதி :

உண்மையில் ஷங்கரின் மூத்த மகள் திருமண வரவேற்பு மே 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தான் ஷங்கர் தற்போது பத்திரிக்கை வைத்து வருகிறாராம். அதிதி தற்போது கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் கொரோனா குமார் படத்திலும் நடிக்க இருக்கிறார். மருத்துவம் முடித்த அதிதி சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தாலே நடிகையாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement