பொது விழாவில் பலரின் முன்னிலையில் விஜய்யை அவமதித்தாரா பாலா ? வைரலாகும் வீடியோ.

0
30538
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் பாலா அவர்கள் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் படம் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-
?

விஜய் அண்ணாவ ஒரு ஆளா கூட மதிக்கல?

Troll Vijay ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಜನವರಿ 5, 2020

இந்நிலையில் இயக்குனர் பாலா அவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யை அசிங்கப்படுத்தி உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்கள். அதில் தளபதி விஜய்யை பாராட்டி பல பேர் கை கொடுத்தும், கைத்தடியும் கரகோஷம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது பாலா அவர்கள் சேரில் உட்கார்ந்தபடியே இருந்தார். மேலும், தளபதி விஜய்யை பார்த்து நடிகர் கமலஹாசன், பிரபலமான இயக்குனர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். ஆனால், இயக்குனர் பாலா மட்டும் உட்கார்ந்து கொண்டு எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.

இதையும் பாருங்க : கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா. பிரியா பவானி ஷங்கரை வர்ணித்து புகைப்படத்தை பதிவிட்ட இயக்குனர்.

- Advertisement -

இதனால் இயக்குனர் பாலா அவர்கள் தளபதி விஜய்யை அசிங்கப்படுத்தி உள்ளார் என்று சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளார்கள் ரசிகர்கள். மேலும், இந்த பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார்.

Image result for Vijay

-விளம்பரம்-

இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், ,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரை அரங்கிற்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள்.

Advertisement