என்னது பிக் பாஸில் கலந்துகொள்ள போகிறாரா ஷர்மிளா ? ட்விட்டரில் கிளம்பிய விவாதம்.

0
1253
Sharmilaa
- Advertisement -

கோவை ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு கமலஹாசன் காரை பரிசளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் தற்போது கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது. தற்போது சோசியால் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது கோவை ஓட்டுனர் ஷர்மிளா பற்றி தான். சில மாதங்களாகவே இவர் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் கோவை தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவர் தன்னுடைய தந்தையிடம் தான் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார். பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பரட்டை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் கூட பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஷர்மிளா பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்து அவரிடம் கலகலப்பாக பேசி பாராட்டியும் இருந்தார்.

- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

பின் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை பேருந்தில் அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். பின் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

ஷர்மிளா விவகாரம்:

பின் தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார்.இது தொடர்பாக பேட்டியும் அளித்து இருந்தார். இதை அடுத்து பலரும் ஷர்மிளாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஷர்மிளா வேலையை விட்டு நின்ற விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பேட்டியில் ஷர்மிளா அவர்கள் பேருந்து ஓட்டவில்லை என்றால் நான் ஆட்டோ, கார் வாங்கி ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கார் பரிசளித்த கமல் :

இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

அடுத்த பிக் பாஸ் போட்டியாளர் :

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். கமலின் இந்த செயல் பாராட்டு பெற்று வரும் அதே வேளையில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. அடுத்த பிக் பாஸ் போட்டியாளர் ரெடி என்று ஷர்மிளாவையும் கமலையும் கேலி செய்து வருகின்றமன்னர்.

Advertisement