உதவி கேட்டுள்ள பரவை முனியம்மா, ஊர் வரை சென்றும் சந்திக்க முடியாமல் திரும்பியுள்ள விவேக் – காரணம் இது தானாம்.

0
37457
Paravaimuniyammavivek
- Advertisement -

பிரபல நடிகை பரவை முனியம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா. விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரில் பிறந்ததால் இவருக்கு பரவை முனியம்மா என்று பெயர் வந்தது. தூள் படத்தில் இடம்பெற்ற சிங்கம் போலே என்ற என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி என்றும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். புகழின் உச்சியில் இருந்த பரவை முனியம்மா வயது முதிர்ந்த நிலையில் நோய் காரணமாக வறுமையில் வாடி இருந்தார் .பரவை முனியம்மா ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய வறுமையை கண்டு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆறு லட்சம் ரூபாய்யை நிதி உதவியும், குடும்பச் செலவுக்காக மாதம், மாதம் ஆறாயிரம் ரூபாயும் கொடுத்து இருந்தார்.

இதையும் பாருங்க : எப்பேய், கருணாஸ் மகனா இது ? எப்படி படு ஸ்டைலிஷா மாறிட்டாரு பாருப்பேய்.

- Advertisement -

இவர்களுக்கு மாற்று திறனாளி மகனும் உள்ளார். இடையில் பரவை முனியம்மாவிற்கு உடல் நிலை மோசமான போது நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று பண உதவி அளித்தார். அதே போல மீண்டும் உடல் நல குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்ட போது நடிகர் அபி சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து, உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார்.

ஆனால், கடந்த மார்ச் 29 ஆம் தேதி பரவை முனியம்மா உடல் நல குறைவால் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் அபி சரவணன் மட்டும் தான் கலந்து கொண்டார். இந்த நிலையில் பிரபல நடிகர் விவேக் பரவை முனியம்மா இறப்பு குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். அதில், பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : மூன்றாம் நிலை கொரோனாவா? அரை குறை ஆடையில் ஆட்டம் போட்டு ரித்திகா பதிவிட்ட வீடீயோவை கலாய்க்கும் ரசிகர்கள்.

-விளம்பரம்-

மேலும், பரவை முனியம்மா குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றையும் பகிர்ந்துள்ளார் விவேக், அதில் ‘நாங்கள் இருவரும் இணைந்துமுதலில் தூள் படத்தில் தான் நடித்து இருந்தோம். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து காதல் சடுகுடு மற்றும் ஒரு சில படங்களில் எங்களுடைய காம்பினேஷன் மிகவும் பிரபலமாக இருந்தது. பரவை முனியம்மா நாட்டுப்புற பாடலில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது அவருடைய சொந்த ஊரில்தான் அவர் இருந்து வந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் உதவி ஒன்றை கேட்டிருந்தார். ஒருமுறை நான் கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நான் பரவை முனியம்மா வின் வீட்டைத் தேடிச் சென்றேன்.

Image

மேலும், நான் அவரை குறித்து கேட்டபோது ஒருவர் என்னிடம் வந்து அவர் இங்கே இல்லை அவர் மதுரைக்கு சென்று விட்டார் என்று கூறிவிட்டார். இதனால் நான் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. தற்போது அவரது இரங்கல் செய்தியை கேட்டு நேரம் எவ்வளவு விரைவாக சென்று விட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒருசில படங்கள் பற்றி நாம் பேசினால் முதல் பாதி நன்றாக இருக்கும் இரண்டாம் பாதி நன்றாக இருக்காது என்றுதான் சொல்லுவோம். ஆனால், அவருடைய இரண்டாம் பாதி பல்வேறு நினைவுகளையும் அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார் விவேக்.

Advertisement