குட்நைட் சொன்னவருக்கு குட்பையும் சொல்லுவார்கள் – தனது நண்பன் மணிகண்டனை விமர்சித்த நபருக்கு ரமேஷ் திலக் கொடுத்த பதிலடி.

0
2246
Manikandan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் மணிகண்டன். இவர் ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். மேலும், இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார்.நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் மணிகண்டனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் படங்களில் நடித்தார்.

- Advertisement -

தேர்ந்தெடுத்து நடிக்கும் மணிகண்டன் :

ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், எந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ படம் அளவு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் மணிகண்டன், ராஜகண்ணாவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு மணிகண்டன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

குட் நைட் திரைப்படம் :

சமீபத்தில் இவர் நடித்த குட் நைட் படம் மே 12ம் தேதி வெளியானது.மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சம்பளத்தை உயர்த்தினாரா :

குட் நைட் படத்திற்க்கு பின்னர் மணிகண்டன் புதிய படங்களில் கமிட் ஆக 2 கோடி சம்பளம் கேட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘ஒரு படம் ஓடிட்டா கோடிகள்ல சம்பளம் கேக்குறது இந்தக் கேன தமிழ்சினிமாவுலதாங்றது தலவிதியாவே ஆய்டுச்சு. கோடிகள்ல சம்பளம் கேக்குற லிஸ்ட்ல இப்ப சேர்ந்துருக்குறது மணிகண்டன். நடிப்புதான்னு இல்லாம கதையில வேற தலையீடாம். குட்நைட் சொன்னவருக்கு குட்பையும் சொல்லுவார்களென்பது தெரிந்திருக்கும்தானே.’ என்று மணிகண்டனை விமரிசித்து இருந்தார்.

ரமேஷ் திலக் பதிலடி :

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகரும் மணிகண்டனின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் திலக் ‘அடேய் குத்தூசி போய் எதாவது வேள இருந்தா பாருடா’ என்று பதிவிட்டு இந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். ரமேஷ் திலக் மற்றும் மணிகண்டன் இருவரும் சிறந்த நண்பர்கள் மணிகண்டன் நடிகனான போதில் இருந்தே அவரை ஊக்குவித்தே கொண்டு இருந்தது ரமேஷ் திலக் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement