மோடிக்கு வணக்கம் தெரிவிக்காமல் தவிர்த்தாரா மம்முட்டி? – விழாவில் நடந்தது என்ன? உண்மை இதோ.

0
434
- Advertisement -

சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் பிரதமர் மோடி வணக்கம் சொல்லி, மம்முட்டி கண்டுகொள்ளாமல் இருந்த விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் சுரேஷ் கோபி மகளின் திருமணம் குறித்து செய்தி தான் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுரேஷ் கோபி. இவர் அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், தமிழில் இவர் தீனா, சமஸ்தானம், இருந்தாலும், ஐ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கு சில தினங்களுக்கு முன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் மலையாள திரை உலகின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக, மம்முட்டி- மோகன்லால் ஆகியோரும் ஒன்றாக வருகை தந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்களை அடுத்து நடிகர் ஜெயராம், திலீப், குஷ்பூ என பல ஜெயராம், உலகப் பிரபலங்கள் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திருமணம் பிரதமர் மோடி தலைமையில் தான் நடைபெற்று இருக்கிறது. மேலும், இது தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபி சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், திவ்யமான குருவாயூர் கோயிலில் வைத்து பிரதமர் நரேந்திரமோடி-யின் கவுரவ முன்னிலையில் எனது பிரியப்பட்ட பிள்ளைகளின் திருமணம் நடந்தது.

சுரேஷ் கோபி மகளின் திருமணம்:

தயவுசெய்து பாக்யா-ஸ்ரேயஸ் ஆயோருக்காகப் பிராத்தியுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த திருமணத்தில் நடந்த சில நிகழ்வுகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் மீம்ஸ்களாக வைரலாகி வருகிறது. அதாவது, சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார். இவர் வருவதற்காக குருவாயூர் கோயில் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது. திருமணத்திற்கு சென்ற நடிகர் மோகன் லாலை பாதுகாப்பு படையினர் சோதனை செய்யவில்லை. நடிகர் மம்மூட்டியை மெட்டல் டிடக்ட்ரில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. பின் நடிகர்கள் வரிசையாக நின்ற சமயத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம் சொல்லி நடந்து சென்றிருந்தார்.

-விளம்பரம்-

மோடி-மம்முட்டி குறித்த சர்ச்சை:

அப்போது மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் பிரதமருக்கு பதில் வணக்கம் சொல்லியிருந்தார்கள். ஆனால், மம்மூட்டி வணக்கம் செலுத்தவில்லை. கைகளை கட்டிய படி கண்டு கொள்ளாமல் நின்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாகதான் சோசியல் மீடியாவில் மீம்ஸ் களை நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள். பலருமே மம்முட்டியை ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக விழாவில் நடந்தது குறித்து விசாரித்த போது, குருவாயூர் கோயிலில் நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தின் போது எல்லோருக்குமே முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

உண்மையில் நடந்தது:

பாதுகாப்பு மற்றும் சோதனையில் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. நடிகர் மோகன்லாலுக்கு வணக்கம் செலுத்தி விட்டு அர்ச்சதை வழங்கும் போது மம்முட்டி கைகளை கட்டிக்கொண்டு நின்றது உண்மைதான். மோகன்லாலுக்கு பிரதமர் வணக்கம் செலுத்துவதை மற்றொரு கோணத்தில் படம் பிடித்த போது மம்முட்டிக்கு வணக்கம் செலுத்துவது போன்றும், மம்முட்டி கைகளை கட்டிக்கொண்டு நிற்பதுபோன்றும் தோன்றும். அந்த போட்டோக்களை தவறாக சோசியல் மீடியாவில் பரப்பி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதோடு மம்முட்டியும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கைகளை பிடித்தபடி சிறிது நேரம் பேசினார்.

சுரேஷ் கோபியின் மகன் பதிவு:

மணமக்களை வாழ்வதற்காக பிரதமர் வழங்கிய அச்சத்தையும் மம்மூட்டி பெற்றுக்கொண்டார். இது தான் நடந்தது. இருந்தாலும் மம்முட்டி, மோடிக்கு மரியாதை செலுத்தவில்லை என்று சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிண்டல் அடித்து வருகிறார்கள். இதற்கு சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், சில நபர்கள் இப்படித்தான் பாதி விவரங்களை தெரிந்து கொண்டு நெகட்டிவான விஷயங்களை வாந்தி எடுப்பார்கள். இதுதான் அவர்களுடைய வேலை என்று கூறி மம்முட்டியும் பிரதமர் மோடியும் பேசிக்கொள்ளும் போட்டோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement