தர்பார் படத்திற்கு ஹெலிகாப்டரில் பூ மழை பொழிய பர்மிசன் கொடுங்க. வைரலாகும் விண்ணப்ப படிவம்.

0
3143
darbar

சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் இவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ரஜினி நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இது ரஜினிகாந்தின் 167 வது படமாகும். சென்சாரில் யு/ ஏ சான்றிதழ் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தர்பார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. தற்போது பட புரமோஷனில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்றே சேலத்தில் உள்ள ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி கனகராஜ் என்பவர் கோட்டாட்சியரிடம் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : நடிகை கௌதமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் கௌதமியின் திருமண புகைப்படம்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கோட்டாட்சியர் திரையரங்கம் உள்ள இடத்தை மேற்பார்வை செய்து அறிக்கை அளிக்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவு இட்டு உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது.

-விளம்பரம்-
Image result for Darbar

நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் பல உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement