என்னது மாஸ்டர் திரைப்படம் இந்த மலையாள படத்தின் காபியா – இதோ விவரம்.

0
7311
master

பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேபோல கைதி படத்தில் தனது குரலால் அசத்திய அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா, மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்த நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இருப்பினும் இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.கொரோனா பிரச்சனைக்கு பின்னர் திரையரங்குகள் அனைத்தும் 50 % இருக்கைகள் அனுமதியுடன் திறக்கப்பட்டது. ஆனால், மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களின் சோகம்

- Advertisement -

ம். இப்படி ஒரு நிலையில் ரசிகர்களை தெம்பூட்டும் விதமாக ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது இந்த படத்தின் ஒன் லைன் கதை லீக் ஆகியுள்ளதாம். அதாவது, இந்த படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான் ஆனால் அவர் குடிக்கு அடிமையான ஒரு நபராகவும் அதிகம் குடிப்பதால் பார்வை கோளாறு ஏற்பட்டு விடுமாம்.ஒரு கட்டத்தில் வில்லன்களாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸுக்கும் விஜய்க்கும் பிரச்சனை ஏற்பட்டு விடுமாம். அதனை மாணவர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாம்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூந்தமல்லியில் உள்ள கண் பார்வையற்றோர் பள்ளியில் படமாக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த படத்தில் இடம்பெற்ற ‘க்யுட் பண்ணுடா’ பாடலில் கூட நடிகர் விஜய் கையில் மதுபானத்துடன் இருப்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியனாது. இதை பார்த்து பலர், இந்த திரைப்படம் 2017 ஆம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர் பீஸ்’ படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement