‘வயசுலாம் ஒரு மேட்டரா ‘ பிரகாஷ் ராஜ் முதல் ஆஷிஷ் வரை – இளம் பெண்களை திருமணம் செய்த 5 நடிகர்கள்.

0
1230
- Advertisement -

நிறைய வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருக்கும். அதில் சில பிரபலங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். சமீப காலமாக இப்படி வயது வித்தியாசம் பார்க்காமல் நடைபெற்று வரும் பிரபலங்களின் திருமணங்கள் சோசியல் மீடியாவில் கேலி கிண்டலுக்குள்ளாகி இருக்கிறது

-விளம்பரம்-

இது ஒரு வகையில் அவர்களுக்கு நியாயமாக இருந்தாலும் இன்னொரு வகையில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட ஐந்து பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில்,

- Advertisement -

ஆர்யா- சாயிஷா:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆர்யா. அதேபோல் சாயிஷாவும் பிரபலமான நடிகை. இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளிவந்த கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் போது தான் இவர்கள் இருவருமே காதலிக்க தொடங்கினார்கள். அதற்கு முன்பே ஆர்யா- சாயிஷா இருவரும் இணைந்து டெடி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். பின் இவர்கள் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தின் போது சாயிஷா- 21, ஆர்யா- 38 .ஆக மொத்தம் இவர்கள் இருவருக்கும் இடையில் 17 வயது வித்தியாசம்.

பிரித்திவிராஜ்- சீத்தல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரித்திவிராஜ். இவரை பப்லு என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்ன திரையிலும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த கண்ணானே கண்ணே தொடரில் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவருக்கு 57 வயது ஆகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டு இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் சீத்தல். இவருக்கு 24 வயது தான் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் மத்தியில் 33 வயது வித்தியாசம் இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் சேட்டை வீடியோகள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வேலு பிரபாகரன்- ஷெர்லி:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர், தயாரிப்பாளர், நடிகராக திகழ்ந்தவர் வேலு பிரபாகரன். இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் தன்னுடன் படத்தில் நடித்த நடிகை ஷெர்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 30 வயது தான் ஆகிறது. இருவருக்கும் இடையில் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு பலமே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் செய்த காரியம் வரும் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை தூண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ்- போனி வர்மா:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தால் தான் மிரட்டி இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் போனி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இவருக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகும்போது 45 வயது. இவருக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருந்தும் இவர் தன்னுடன் வயதில் குறைவான போனி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்தி- ரூபாலி:

இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் கில்லி படத்தில் விஜயின் தந்தையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 50 வயது நிறைந்த ரூபாலி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் இந்த மாதம் தான் நடைபெற்றது. இவர்களுடைய திருமண வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது

Advertisement