வாத்தி கம்மிங்கை காப்பி அடிக்க நினைத்து சோபாவில் இருந்து விழுந்தாரா புகழ் ? உண்மை என்ன ?

0
879
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். சமீபத்தில் புகழ் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் புகழ்.

இதையும் பாருங்க : இவரு என்ன பால் குடிக்கிறார் ? பெண்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய லியோனி குறித்து வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்.

- Advertisement -

அதோடு இவர் தற்போது சந்தானத்துடன் ஒரு படம், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என்று சினிமாவிலும் படு பிசியாக இருந்து வருகிறார். அதே போல இவர் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் வாத்தி கம்மிங் பாடலில் விஜய் சோபாவில் படுத்துக்கொண்டு வருவது போல வீடியோ ஒன்று வைரலானது.

பாடலின் ஆரம்பத்தில் நடிகர் விஜய் சோபாவில் படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரை அப்படியே மாணவர்கள் தூக்கி வருவார்கள். அதே போல அந்த வீடியோவில் புகழ், சோபாவில் படுத்துகிடக்க அவரை சிலர் தூக்கி வரும் போது அவர் தவறி கீழே விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது புகழ் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement