இந்தியாவின் முதல் ஏர்போர்ட் தியேட்டர் என்று பெருமையை பெற்ற PVR Aerohubஐ மூட வழக்கு – விவரம் என்ன ?

0
1669
Pvr
- Advertisement -

சென்னை விமான நிலைய திரையரங்கை மூடச்சொல்லி எழுந்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிவிஆர் சினிமாஸ் என்ற புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் சென்னை விமான நிலை பக்கத்தில் திறக்கப்பட்டது. இந்த திரையரங்கம் 5 ஸ்கிரீன்களைக் கொண்டது. இந்த திரையரங்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவே திறக்கப்பட்டது.

-விளம்பரம்-

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த திரையரங்கிற்கு விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மட்டுமில்லாமல் அருகில் இருக்கும் பொதுமக்களும் வந்து படம் பார்த்து செல்கின்றனர். இதனால் இந்த திரையரங்கம் எப்போதுமே கூட்டமாக இருக்கிறது. அதுவும் வார இறுதி நாட்களில் கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

பிவிஆர் சினிமாஸ்:

இந்த திரையரங்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை எல்லாம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சொந்தமான ஆறு அடுக்கு கார் பார்க்கில் தான் நிறுத்தி விட்டு வருகின்றனர். இந்த கார் பார்க்கிங் மட்டும் 250 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பார்க்கிங் வசதி திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், விமான நிலையத்துக்கு வரும் பொது மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகள் இல்லாமல் போய்விடுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு:

இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் பல புகார்களை சந்தித்து வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த ஆறு அடுக்கு கார் பார்க்கிங் உள்ள திரையரங்கை மூட சொல்லி சென்னை விமான நிலைய அதிகாரிகள் சார்பாக கடிதமும் அனுப்பப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அனுமதி வாங்கி கட்டப்பட்ட திரையரங்கை மூடச்சொல்லியும் இருக்கிறார்கள். இதனால் பிவிஆர் சினிமாஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பிவிஆர் சினிமாஸ் கூறியது:

இதனைக் குறித்து பிவிஆர் சினிமாஸ் உயர் உயரதிகாரிகள் கூறியிருப்பது, நாங்கள் முறையாக சட்டப்படி தான் அனுமதி வாங்கி இந்த கட்டிடத்தை திறந்து இருக்கிறோம். ஆனால், இப்போது மூட சொல்லி புகார் கொடுக்கிறார்கள். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இது சம்பந்தமாக இப்போது எதுவும் பேச முடியாது என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த பிவிஆர் சினிமாஸ் விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement