கோபிக்கு அடுத்த ஷாக்கைகொடுத்த பாக்கியா – புதிய திருப்பத்தை வரவேற்கும் ரசிகர்கள்

0
1628
Baakiyalakshmi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய வாரத்திற்கான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா தான் போட்ட சவாலில் வெற்றி பெற்று வீட்டை தன் பெயரில் மாற்றி விடுகிறார். அதோடு இனியாவின் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட்டு வந்தது. அதில் இனியா 600க்கு 596 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இதனால் பள்ளியில் இனியாவிற்கு பாராட்டு விழா நடைபெற்று இருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் இனியாவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மேடையில் இனியாவிற்கு பரிசு வழங்குகிறார்கள்.

இனியா கல்லுரி:

அப்போது கோபியும் ராதிகாவும் போய் இனியா பக்கத்தில் நிற்கிறார்கள். இதனால் இனியா தன்னுடைய அம்மா மீது கோபப்படுகிறார். பின் எப்படியோ இனியாவை சமாதானம் செய்கிறார் பாக்கியா. மேலும், இனியாவிற்கு மீடியா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், கோபி அவரை பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் இனியாவின் விருப்பத்திற்கு தான் ஓகே சொல்கிறார்கள். இந்த முறையும் கோபி மூக்கு உடைந்து செல்கிறார். அடுத்த நாள் கல்லூரியில் இனியாவை சேர்க்க பாக்கியா செல்கிறார். அங்கு கோபியும் வந்து நிற்கிறார்.

-விளம்பரம்-

பாக்கியாவின் கனவு:

கல்லூரியை பார்த்தவுடன் பாக்யாவிற்கு ஒரே சந்தோஷம் வந்துவிட்டது. அதோடு கல்லூரியில் பாக்யா இங்கிலீஸில் பேசுகிறார். இதை கேட்டு கோபியும் இனியாவும் வாயடைத்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் தனக்கும் கல்லூரி படிக்க வேண்டும் என்ற ஆசை பாக்யாவிற்கு ஏற்படுகிறது. ஆனால், வயதாகிவிட்டது என்பதால் அமைதியாகிவிட்டார். இதை பழனிச்சாமியுடன் சொன்னவுடன் அவர் நீங்களும் படிக்கலாம் என்று சொல்கிறார். பின் இது குறித்து இனியாவிடம் பேச அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று சொல்கிறார். இதோடு கடந்த வார எபிசோட் முடிந்துவிட்டது.

சீரியலின் புதிய ப்ரோமோ:

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யா எழியிடம் கல்லூரி படிப்பது குறித்து பேசுகிறார். அதற்கு எழில், நீங்கள் படி அம்மா. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் என்று கல்லூரியில் பாக்கியாவை சேர்த்து விடுகிறார். இதை அறிந்த இனியா தன்னுடைய அப்பாவை அழைத்து, அம்மாவும் என்னுடைய கல்லூரியிலேயே சேர்ந்து விட்டார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கோபி ஷாக்கில் இருக்கிறார். இனி கோபி, பாக்கியாவிடம் சண்டை போடுவாரா? இனியாவிற்கும் பாக்யாவிற்கும் பிரச்சனை வருமா? பாக்கியா தன்னுடைய கனவை நிறைவேற்றுவாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement