விக்ரமுடன் அஜித் படத்தை ஒப்பிட்டு கலாய்த்து பதிவிட்டாரா லோக்கியின் நண்பர் இயக்குனர் ரத்னகுமார். வைரலாகும் பதிவு.

0
212
ratnakumar
- Advertisement -

அஜித்தை கலாய்த்து தான் இயக்குனர் ரத்தினகுமார் டீவ்ட் செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிடும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மது என்ற குறும்படத்தின் மூலம் சினிமாத்துறையில் என்ட்ரி ஆனவர் இயக்குனர் ரத்தினகுமார். பின் இவர் வைபவ் வைத்து மேயாத மான் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஆடை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அமலா பால் நடித்து இருந்தார். இந்த படம் மிகவும் சர்ச்சை ஆகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த மாஸ்டர் திரைப்படத்தில் இணை இயக்குனராக ரத்னகுமார் பணியாற்றியிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தில் இணை இயக்குனராக ரத்னகுமார் பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

விக்ரம் படம் ரிலீஸ்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் இன்று வெளியாகியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமலஹாசன் படம் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரையரங்கில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.

படத்தின் கதை:

இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படம் குறித்த தகவல்:

இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார்.
படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படம் குறித்து பலரும் நல்லவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் ரத்தினகுமார் டீவ்ட் போட்டிருக்கிறார்.

ரத்னகுமார் டீவ்ட்:

அதில் அவர், ‘’ Loki Sambavam வாழ்த்துக்கள் நண்பா லோகேஷ் கனகராஜ் “ என்று பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் குடும்பங்கள் கொண்டாடும் என்ற ஒரு போல்டர் ஒன்று இருக்கிறது. அதாவது இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், வலிமை ஆகிய படங்கள் தான் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தது. இதை குறிப்பிட்டு தான் ரத்னகுமார் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சர்ச்சை கிளப்பி இருக்கிறார்கள். தற்போது ரத்னகுமார் டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement