இவரால் தான் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததா ? சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை. இவர் யார் தெரியுமா ?

0
696
surya
- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்க அவருடைய மேனேஜர் தான் காரணம் என்ற புதிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் சமீபத்தில் தான் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : சுந்தரி கேபிரில்லாவை தொடர்ந்து சமையல் மந்திரன் ஆங்கரை பாலோ செய்யும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – யாருன்னு நீங்களே பாருங்க.

சூர்யா – பாலா கூட்டணி:

அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சூரரைப்போற்று:

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சூரரைப்போற்று. இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசானில் வெளியிடப்பட்டிருந்தது. இது ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சுவாரஸ்யமான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் இந்த படம் வெளியாகி இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்:

மேலும், இந்த படம் வெளியான போதே இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான பட்டியல் வெளியாகி அதில் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வாகியுள்ளது. மேலும், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகளை இந்த படம் அள்ளிச் சென்றது.

சூர்யாவின் தேசிய விருது குறித்த புதிய சர்ச்சை:

இதற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சூர்யாவின் தேசிய விருது குறித்த ஒரு புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது, சூர்யாவுக்கு மேலாளராக இருக்கும் தங்கதுரை தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்திருக்கிறார். அவருடைய பரிந்துரையின் பேரில் தான் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு சில தரப்பினர் பேசி வருகின்றனர். அதேசமயம் சூரரைப்போற்று மிகச்சிறந்த படம் என்றும், சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்றும், சூர்யா இந்த விருது தகுதியானவர் தான் என்றும், இதை சூர்யாவை விரும்பாதவர்கள் செய்த வேலை என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement