கோவிலில் தீண்டாமையைச் சந்தித்தாரா யோகிபாபு ? கோவில் தீட்சிதரின் செயலால் சர்ச்சை. வைரலாகும் வீடியோ.

0
1802
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் பட்டியலில் இவரது பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். அவருக்கு நடந்த செயல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. யோகி பாபுவின் கையைப் பிடிக்க பூசாரி தவிர்த்து இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது  முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை குவித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். இதனிடையே யோகி பாபு அவர்கள் மஞ்சு பார்கவி என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக இருந்தது.

- Advertisement -

தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தை இருக்கிறது.  கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் எல்ஜிஎம். இந்த படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது யோகி பாபு நடித்திருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

ஜெயிலர் படம்:

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

யோகி பாபு சாமி தரிசனம்:

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்தும் தொடர்ந்து யோகி பாபு  பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதையும் வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு கோயிலுக்கு சென்று இருக்கிறார்.

நெட்டிசன்கள் பதிவிட்ட வீடியோ:

அங்கு யோகி பாபுவை பார்த்து பக்தர்கள் பலரும் செல்பி எடுத்து இருக்கிறார்கள். அதன் பின் யோகி பாபு பூசாரியிடம் சென்று பேச கை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் யோகி பாபுவிற்கு கைகொடுக்கவில்லை. கடைசி வரை அவர் யோகி பாபுவிற்கு கைகொடுக்காமல் தான் பேசி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோவை தான் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்து இப்ப எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் கேட்பவர்களுக்கு என்று கேப்சன் போட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள். இதை பார்த்த பலருமே கண்டனத்தை தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்

Advertisement