‘சிந்துவுக்கு இந்த முடிவை தான் கேட்டோம்’ – உணர்ச்சிவசப்பட்ட ரோபோ ஷங்கர் – பிரியங்கா.

0
2296
Roboshankar
- Advertisement -

நடிகை சிந்துவின் மரணம் குறித்து ரோபோ சங்கர் மனைவி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அங்காடித்தெருபடத்தில் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை சிந்து. இதனைத்தொடர்ந்து இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி, கருப்பசாமி குத்தகைகாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். நடிகை சிந்து நடிப்பது மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இப்படி சேவை மனப்பான்மை கொண்டவர்.

- Advertisement -

புற்றுநோய் பாதிப்பு :

அந்த சமயத்தில் தான் இவருக்கு திடீரென்று புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நடிகை சிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மேலும் சிந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு வசதி இல்லாததால் இவர் தனது வீட்டிலயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

நடிகை சிந்துவின் இறப்பு:

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி சிந்து அநியாயமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி சிந்துவின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

ரோபோ ஷங்கர் மனைவி அளித்த பேட்டி:

பின்பு செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், நாங்களும் எங்களால் இயன்ற உதவியை சிந்துவிற்கு செய்தோம். அதை நாங்கள் வெளியில் சொல்லவில்லை. அவர் எங்களுடன் பிறந்த அக்கா போல் தான் பழகினார். சிந்துவிடம் நான் இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டு கொண்டுள்ளேன். ஒன்று நமது உடலை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொன்று நமக்கு சேமித்த பின்பு தான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

சிந்துவிடம் கற்று கொண்டது:

ஆனால், சிந்து அப்படி இல்லாமல் தனக்கு வந்த வருமானத்தில் மாத்திரை மற்றும் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, மீதியிலுள்ள பணத்தை பிறருக்கு உதவி செய்திருந்தார். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிந்து அப்படி செய்யவில்லை. சிந்து கடந்த இரண்டு மாதங்களாகவே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார். அதை நான் கண்கூட பார்த்தேன் என்று மனம் உறுகி கண் கலங்கியபடி கூறி இருக்கிறார்.

Advertisement