உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் 3 நிமிட விளம்பரம் செய்ய எவ்ளோ தெரியுமா. அடேங்கப்பா.

0
739
burjkhalifa
- Advertisement -

பொதுவாகவே சினிமா துறையில் படங்களின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அதிலும் வெளிநாடுகளில் பிரபலமான இடங்களில் தங்களுடைய படங்களின் போஸ்டர்களையும், டீசர்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அதோடு விளம்பரங்களை விமானங்களில், பிரபலமான கட்டிடங்கள் என்று வெளிநாட்டில் பிரபலமான இடங்களில் எடுத்து வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில் பல படங்களின் விளம்பரங்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் புர்ஜ் கலிபா துபாயில் உள்ளது. இது 828 மீட்டர் உயரம் கொண்டது. அதேபோல் அதிக அளவில் மிக உயரமான கட்டிடங்கள் எல்லாமே துபாயில் தான் உள்ளது. புர்ஜ் கலிபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையும் பெற்றுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 160 மாடிகள் உள்ளது. அதில் உள்ள 122வது மாடியில் தான் ஹோட்டல்கள் உள்ளது. இவ்வளவு மாடிகள் இருந்தாலும் 125 ஆவது மாடி வரை தான் மனிதர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அனுமதி உண்டு.

இதையும் பாருங்க : ‘வாழ்த்துக்கள் பாப்பா’ – சின்மயி துவங்கிய புதிய கடையை திறந்து வைத்த சமந்தா. கலக்கல் புகைப்படங்கள் இதோ.

- Advertisement -

மேலும், இந்த உயரமான கட்டிடத்தை 95 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இந்த கட்டிடத்தை கட்டும் காலத்தில் தினந்தோறும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த கட்டிடம் 2004ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 2010 ஆம் ஆண்டு தான் முடிவு பெற்றது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய திறன் பெற்றது. அதாவது ஒரு நொடிக்கு இரண்டு ப்ளோர்கள் என்பது அதனுடைய வேகம். இந்த கட்டிடத்தில் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள் முழுவதுமாக ஒருவர் கிளீன் செய்ய மூன்று மாதங்கள் வரை ஆகும்.

அதேபோல இந்த கட்டிடத்தின் சாதனையை முறியடிக்க இதைவிட உயரமான கட்டிடத்தை தற்போது ஜாத்தா நகரில் கட்டி வருகிறார்கள். மேலும், தரைப்பகுதியில் உள்ள வெப்ப நிலையைவிட கட்டிடத்தின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கட்டிடத்தை பார்க்க வேண்டுமென்றால் முன் கூட்டியே 3500ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டுமாம். இப்படி புகழ்வாய்ந்த பிரபலமான இந்த கட்டிடத்தில் பல படங்களின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் 2.o படத்தின் மியூசிக் லான்ச், ஷாருக்கானின் பிறந்தநாள் விழா, கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோனா’ படம், நவரச படத்தின் டீசர் என படங்களின் விளம்பரங்கள் வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரி கட்டிடங்கள் மூலம் விளம்பரம் படுத்துவதற்கு பணம் எதுவும் இல்லை என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அது உண்மை இல்லை. இந்த கட்டிடத்தில் விளம்பரம் செய்ய மூன்று நிமிடத்திற்கு வார நாட்களில் 50, 47,544 வசூலிக்கிறார்கள். அதுவே வார இறுதியில் 70,68,084 ரூபாய் வசூலிக்கிறார்கள். கட்டிடத்தை போல் இதன் வசூலும் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

Advertisement