இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாங்க படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்..
கதைக்களம் :
2022ஆம் ஆண்டு சந்தானம் அவர்கள் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். இவர் ஹாக்கி வீரர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், இவரால் தன் கனவை நிறைவேற்ற முடியவில்லை. பின் சந்தானம் ஈபி மேனாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் திருமண வாழ்க்கையிலும் சந்தானத்துக்கு நிம்மதி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்பா தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இதையும் பாருங்க : பிக் பாஸில் இருக்கேனா இல்லையா ? லைவில் சொன்ன ஜி பி முத்து – அப்டேட்க்கு இவரே போதும் போல.
இந்த நிலையில் தான் அதாவது 2027 ஆம் ஆண்டு சந்தானம் மின்சாரம் சரி செய்யப்போன இடத்தில் டைம் மெஷின் ஒன்று கிடைக்கிறது. இதை வைத்து இவர் மீண்டும் 2020 ஆண்டுக்கு சென்று தன்னுடைய வாழ்க்கையை மாற்றலாம் என்று நினைத்து செல்கிறார். தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். கடைசியில் சந்தானம் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? ஹாக்கி போட்டியில் ஜெயித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
சந்தானம் படம் முழுக்க தன்னுடைய வழக்கமான ஸ்டைலிலேயே நடித்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய டைமிங் காமெடி கொஞ்சம் போரடிக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவர் மிக அதிகமாக உடல் எடையை குறைத்து இருப்பதால் இது சந்தானமா? என்று கேட்கும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். அனகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிறிது நேரம் வந்தாலும் வழக்கம்போல் யோகி பாபு அனைவர் மனதையும் கொள்ளை அடித்து விட்டார். ஆனந்தராஜ் மற்றும் முனீஸ் கானின் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இவர்களுடைய காமெடியும் படம் ஓடுவதற்கு பெரிதும் உதவியுள்ளது என்று சொல்லலாம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து இருப்பது பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. டிராவல் மெஷின் கான்செப்ட் இதற்கு முன்னே இன்று நேற்று நாளை, ஓ மை கடவுளே போன்ற படங்களில் இருப்பதால் இந்த படம் காப்பி சாயல் போலவே உள்ளது.
பிளஸ்:
படம் முழுக்க நகைச்சுவை மட்டுமே உள்ளது என்று சொல்லலாம்.
ஒளிப்பதிவும், யுவனின் இசையும் படத்திற்கு பக்கம் பலகாக உள்ளது.
மைனஸ்:
மற்ற படங்களைப் போலவே டைம் டிராவல் படமாக இருப்பதால் படம் கொஞ்சம் சொதப்பல் என்றே சொல்லலாம்.
அதிலும் சந்தானத்தின் உருவ மாற்றம் அனைவருக்குமே அதிர்ச்சியை தந்துள்ளது.
மொத்தத்தில் டிக்கிலோனா பொழுது போக்கு படம் தவிர வெற்றி கிடையாது.