விஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..!

0
364
Vijaysethupathi

தமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களின் ரசிகர்கர்களாலும் விரும்பப்படும் வேறு ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றியின் லிஸ்டில் தான் சேர்க்கிறது.

96 movie

அந்த வகையில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்த படம் ’96. இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம், சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

தீபாவளியன்று இந்தத் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னரும் ’96 படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்துதள்ளியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்துள்ள அவர், ‘96 என்ன ஒரு அழகான படம். நான் இதை மிகவும் விரும்புகிறேன். காதலே காதலே ரசனையான பாடல். ஒவ்வொரு ஃபிரேமும் பாடலும் மிக அருமை. நான் சமீபகாலமாக விஜய் சேதுபதியின் ரசிகனாக இருந்து வருகிறேன். ஆனால், ’96 படம் என்னை அடித்துச் சென்றுவிட்டது. கோவிந்த் வசந்தாவின் காதலே… காதலே… பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.