‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் நடிக்க இது தான் காரணம் – இயக்குனர் மகிழ்திருமேனி சொன்ன தகவல்

0
129
- Advertisement -

விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்த காரணம் குறித்து இயக்குநர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

நேற்று அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.30 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது.

மகிழ்திருமேனி பேட்டி:

இனி வரும் நாட்களில் விடாமுயற்சி படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆரவாரத்துடன் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தை கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எல்லா திரையரங்களிலுமே திருவிழா போல ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் மகிழ்திருமேனி, விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்த காரணம் குறித்து கூறியிருந்தது, பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று அஜித் சார் அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.

-விளம்பரம்-

விடாமுயற்சி படத்தில் நடிக்க காரணம்:

தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய வன்முறைகள் நடக்கிறது. அதை குறித்த செய்திகளை பற்றியும் அவர் பேசுவார். இந்த மாதிரியான செய்திகள் அவரை மனதளவில் பாதிக்கிறது. அதனால் தான் அவர் பெண்களை மையமாக வைத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லுவார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் பெண்களை மையமாக வைத்து இருக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார் என்று கூறி இருக்கிறார்.

படத்தின் கதை:

மேலும், படத்தில் அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் சென்றார்கள். அப்போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement