முதன் முறையாக தனது மகன் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஏ எல் விஜய்.

0
14509
al
- Advertisement -

முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ எல் விஜய். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டனர்.

-விளம்பரம்-
Amala Paul's ex-husband-director AL Vijay marries R Aishwarya in Chennai -  Movies News

பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால்.

இதையும் பாருங்க :உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு தளபதி 65 பட நடிகை கொடுத்த போஸ்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏ எல் விஜய்யின் தந்தை அமலா பாலை தனது மகன் ஏன் விவாகரத்து செய்தார் என்பதற்கான காரணத்தை சொன்னார்.அதில், அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டு என்று கூறியிருந்தார்.மேலும், அதே போல தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார் அமலா பால்.

கடந்த ஆண்டு தான் ஏ எல் விஜய்க்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ எல் விஜய். இறுதியாக ஏ எல் விஜய் ‘தேவி 2 ‘ படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரிலிசுக்காக காத்துகொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement